நள்ளிரவு பொங்கல்

5 years 24 weeks ago                       3,387 views(10 today)

Worked for this? Login or Register to join your team, its FREE!

நள்ளிரவு பொங்கல்
நல்ல பசை உள்ள பார்ட்டியை மடக்கி பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டத்தை பற்றிய கதை இது. டைட்டில் போடுவதற்கு முன்னால் அவர்கள் எப்படி தந்திரம் செய்து ஒரு பணக்காரனை மடக்கப் போகிறார்கள் என்பதை நேயர்களுக்கு காட்டி விடுகிறோம். கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு அது தெரியாது என்பதுதான் சஸ்பென்ஸ்.
இது பழைய ஹிட்சிகாக் ஸ்டைல் என்றாலும் பலர் மறந்துவிட்ட ஒன்று. நம்மை அது வித்தியாசப்படுத்தும் என்று நினைக்கிறேன்.
இரண்டு பணக்கார நபர்கள் நன்கு குடித்துவிட்டு கார் ஓட்டிக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி இந்த கும்பலுக்கு தெரிந்திருக்கிறது. ஒரு வளைவான பாதையில் ஒரு முழு உருவ ரப்பர் மனிதனுக்கு ஆடைகள் போட்டு கொக்கிகள், மரம் வழியாக மெல்லிய நைலான் கயிறுகள் கொண்டு அந்த கார் மீது மோதிவிட தயாராக இருக்கிறார்கள். கார் மோதி தடுமாறி சற்று தொலைவு போய் நிற்கவும், அந்த ஆளுயர ரப்பர் பொம்மையை அப்புற படுத்திவிட்டு தயாராக மேக்கப் போட்ட ஒருவர் விபத்து ஆன மாதிரி கலைந்து கிடக்க மற்ற சாமான்கள் சிதறி கிடக்க ஒரு செட்டப் செய்து வைக்கிறார்கள். இது அனைத்தையுமே அவர்கள் ஒரு கம்யூட்டர் அனிமேஷனாக காட்டுவதாக நாம் திரைகதையில் சொல்லலாம்.
அதே மாதிரி இரண்டு பேர் கொண்ட ஒரு கார் வருகிறது. செட்டப் ஆக்ஸிடென்ட் நடக்கிறது. ஒருவன் முன் சீட்டில் சரிந்து கிடக்க, கார் ஓட்டியவன் டார்ச்சருக்கு உள்ளாகிறான். ஒரு செட்டப் போலீஸ் வந்து விசாரிக்கிறது. ஒரு செட்டப் ஆம்புலண்ஸ் பாடியை எடுத்துப் போகிறது. முதலில் உயிர் ஊசலாடுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது.
இந்த நாடகம் நடக்கும் போது இரண்டு சொதப்பல்கள் அவர்கள் செய்கிறார்கள். ஆனால் அது நம் பணக்கார குடிகார கார் ஓட்டிக்கு தெரியாமல் போகிறது. கிரிமினல் மைண்ட் தலைவன் தன் கூட்டத்தினரிடம் அந்த சொதப்பல்களை சுட்டிக் காட்டி எச்சரிக்கிறாரன்.
மறுநாள் அவன் ஆபீஸில் போய், ஒன்றும் பயப்பட தேவையில்லை. ஆப்பரேஷன் செலவு மட்டும் என்று சொல்லி பணம் பறிக்கிறார்கள். அடிப்பட்டவன் மேற்க்கு வங்காளத்தை சேர்ந்தவன், ஒரு கட்டிட கட்டுமான பணியில் வேலை செய்பவன் என்று கதை கட்டுகிறார்கள்.
அன்று மாலையே அடிபட்டவன் இறந்துவிட்டான். பாடியை டிஸ்போஸ் செய்ய வேண்டும். போலீசுக்கு தெரியாமல் செய்துவிட இன்னும் பெரிய தொகையை கேட்கிறார்கள். இந்த முயற்ச்சியில் கூட ஒரு சொதப்பல் நடக்கிறது. ஆனால் நம் ஆசாமி அதனை கவனிக்க தவறுகிறார்.
ஒரு பெரிய தொகை கைமாறுவதற்க்கு மறுநாள் ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவு செய்யப்படுகிறது. கிரிமினல் கூட்டம் பக்காவாக நம் ஆசாமியை ஏமாற்றியாயிற்று என்று இறுமாப்பு கொண்டு தண்ணியில் மூழ்குகிறார்கள்.
இப்போதுதான் டிவிஸ்ட்.
நம் ஆசாமியோடு கூடவே பயணம் செய்த நண்பன் தற்போது தெளிவான நிலையில் வருகிறான். நம் ஆசாமி கொஞ்சம் பதட்டமாக இருப்பதை கவனித்து கேட்டுவிட நம் ஆசாமி அத்தனையும் ஒப்புவிக்கிறான்.
முட்டாள். முட்டாள், ஏன் நீ போலீசுக்கு சொல்லலை?
போலீசுல சொன்னா, நான் மாட்டிப்பேனே?
சரி, இப்ப பணம் கொடுக்கிற. நாளைக்கு வந்து இன்னும் அதிகம் கேட்டா?
அப்போது நம் ஆசாமியின் நண்பர் தன் கடிகாரத்தை பார்க்கிறார்.
சரி வா, பேசிகிட்டே போவோம். அவசரமா, என் பொண்ணோட யூனிபார்ம் வாங்கிட்டு வர வேண்டியிருக்கு. அப்பறம் 5 ஸ்டார் சாக்லேட் நாலு அஞ்சு வாங்கனும்.
சட்டென நம் ஆசாமிக்கு பொறிதட்டுகிறது.
யேய். இப்ப என்ன சொன்னே?
யூனிபார்ம், 5 ஸ்டார்.
நம் ஆசாமிக்கு அந்த காட்சி கண் முன்னே விரிகிறது. டிராபிக் போலீஸ் வண்டி. ஆனால் அதில் வந்தவருக்கு கிரைம் போலீஸ் யூனிபார்ம்.
ஆமா, டிராபிக் போலீசுக்கு வெள்ளை யூனிபார்ம்தானே?
ஆமா, ஏன் கேக்கிற?
மவனுகளா, நாளைக்கு வைக்கிறேன்டா உங்களுக்கு பொங்கலு.
************************************************

Type: 
Script
Copyrights: 
All rights reserved (Nobody can use)
Language: 
Tamil
Genre: 
Action
Functional area: 
Crime
TEAM

Writer
X
Loading