ஒரு கண தூண்டிலில்
முதல் கனவு முடிந்திடும் நேரம்
முழுமதியாய் அவள் முகம் படர்ந்திடும்
பனித்துழி அவள் பகல் நிலவென
ஒரு சிறு கூச்சம் ஆட்கொள்ளுமே
எனதிரு விழி கசிந்துருகிடும் நேரம்
அவள் அருகினில் இருந்திட தோன்றிடும்
ஒரு தரம் அடித்திடும் இமைகளில்
மயில் இறகென விழுந்திடுவேன்
அவள் தந்த சிறு மாற்றம்
எனக்குள் அது புது மாற்றம்
இனிய இரவுகலென அவள் துணை தேடிட
சட்டென தூரிகை தூவி வசந்தம் சேர்த்திடுவாள்
அவள்முன் சறுகென சரிந்திடும் இதயம்
பட படவென சிறகை விரித்திடும்
ஒரு கண தூண்டிலில்
குழந்தையென தவழும்
அவள் கை விரல்
பட்டென தொட துடித்திடும்
இரவல் வாங்கி சேர்க்கும் இருதயமென
அவளிடம்இதழ்களை சேர்க்கிறேன்