குரங்கு பெடல் பற்றி...

3 years 25 weeks ago                       2,296 views(1 today)

Worked for this? Login or Register to join your team, its FREE!

நான் ஏழாம் வகுப்புதான் என நினைக்கிறேன்,
"ஓடிப்போலாமா?" ‍‍வசனம் என் இதயத்தை திருடியிருந்தது
எழுந்தேன் அசம்ப்ளியில் அனைவரும் பார்க்க‌
"I will die for you.... சித்ரா" என உளறினேன்....சரியாக ;‍)
மேடையே சிரிப்பில் அதிர அவளும் சிரித்துவிட்டாள் ஜூலியட்டாக‌

இப்படித்தான் அடிக்கடி பின்னோக்கி அரை வட்டமடித்து திரும்பினேன்
"குரங்கு பெடல்" பக்கங்களை படித்து படித்து முன்னேறியபோது
வாசிப்பின் பாதிப்பில் வருவது ஒரு முதல் படைப்பாக இருக்க முடியாது
ஸ்வாசித்தவைகளுக்கு உருவம் தரும்போதுதான் அழகான அழுக்குகள் இருக்கும்
காதல் காற்று மட்டும் இன்னும் வீசவில்லையோ கவிஞருக்கு ??? :‍)

சொல்லியதில் மிகவும் கவர்ந்தது....

நின்று ரசியுங்கள்
அண்ணாச்சி கடை
சலூன் கடை கண்ணாடிகள்
நடுத்தரவர்க்க நம்பிக்கைகள்
வெத்தலப்பொட்டி
புரை

சொல்லே கவர்ந்தது...

செலவு போக மிச்சம் சிரிப்பு மட்டும்தான்...
பணியாரம் பிஞ்சிடாமல் எடுப்பதே சாதனயாகும்...
ஹிட்லர் மடியில் காந்தி...
தோல் தோற்கும் தோள் தோற்குமா...
மஞ்சளும் சிகப்பும் கலந்த தாலி, போட்ட முடிச்சு மூவாயிரம்...
புன்னகயை அன்லாக் செய்து...
இதுவும் ஒரு தவம்

You can buy the book online here http://www.panuval.com/koorangu-petel-10000155

Type: 
Article
Copyrights: 
All rights reserved (Nobody can use)
TEAM

Writer
X
Loading